ப்ரீதம் பரத்வான்
ப்ரீதம் பரத்வான் | |
---|---|
தாய்மொழியில் பெயர் | प्रीतम भरतवाण |
பிறப்பு | சில்லா, டேராடூன், உத்தரப்பிரதேசம் (இப்போது உத்தராகண்டம், இந்தியா) |
பணி | நாட்டுப்புற பாடகர் |
பிரீதம் பரத்வான் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற பாடகர் ஆவார். ப்ரீதம் பரத்வான் டேராடூன் மாவட்டத்தில் உள்ள சில்லா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகர், ஃபோக் கீத், பவண்டா மற்றும் குயால் மொழிகளின் நாட்டுப்புற பாடகர் ஆவார். பாடுவதைத் தவிர, தோல், டமாவ், ஹட்கா மற்றும் தௌர் மற்றும் உத்தரகாண்டின் பிரபல இசைக்கருவியான தகுலியை வாசிப்பதிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டில், ஜாகர் பாரம்பரிய நாட்டுப்புற கலைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தால் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. உத்தரகாண்டில் ஜாகர் சாம்ராட் என்ற சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறார். மேலும் இவரின் பல்வேறு நாட்டுப்புற இலக்கிய பங்களிப்புக்காக மத்திய, மாநில அரசுகளின் பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் அவர் சின்சினாட்டி பல்கலைக்கழகம் மற்றும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் சிறப்பு பேராசிரியராகவும் உள்ளார். [1]
வாழ்க்கை
[தொகு]ப்ரீதம் பரத்வான் டேராடூன் மாவட்டத்தில் உள்ள சில்லா கிராமத்தில் பிறந்தார். அவர் தனது 13 வயதில் இருந்தே தனது மாமாவுடன் சேர்ந்து நாட்டுப்புற பாடல்களை பாடத் தொடங்கினார். அவரது பாடல்கள் இசையின் ஜாகர் பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றன. [2]
2011 முதல், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் விருந்தினர் விரிவுரையாளராக இருந்து வருகிறார். உத்தரகாண்ட் ஜாகர், பவாரா, ஜோரா, சஞ்சாரி, பகத்வாலி, ஆச்சாரி-மந்திரி, குவாரில், சன்பேலி, சமூக பாடல்கள், மங்கள், சைட்டி, பத்வாலி, மவுலியார் மற்றும் பல பிராந்திய நாட்டுப்புற கலைப் பட்டறைகளின் நாட்டுப்புறப் பாடல் மற்றும் இசை கருவி வாசிப்பு முறைகளை ப்ரீதம் பர்த்வான் ஆவணப்படுத்தியுள்ளார். அரசு சாரா நிறுவனமான ஸ்ரீ புவனேஸ்வரி மகிளா அஷ்ர்வம் (SBMA) மற்றும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஹேம் லோக் கலா கேந்திரா நிறுவனம் போன்றவைகளின் ஏற்பாட்டின் பெயரில் பல நாட்டுப்புற பாடல் மற்றும் கருவி வாசித்தல் பட்டறையை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நடத்தியுள்ளார். 300 க்கும் மேற்பட்ட தலித் இளைஞர்களுக்கு நாட்டுப்புற பாடல் மற்றும் தோல் டமாவுன் மற்றும் ஹட்கா போன்ற நாட்டுப்புற இசைக்கருவிகளை இசைக்க பயிற்சி அளித்து அந்த இளைஞர்கள் நாட்டுப்புற இசைக்குழுவை உருவாக்கி தங்கள் பிழைப்புக்கான சுயதொழிலை உருவாக்கி கொள்ள வழிவகுத்துள்ளார். மேலும் உத்தரகாண்ட் மாநில கலாச்சாரத் துறையின் பல திட்டமிடல் கூட்டங்களில் கலந்துகொண்டு, தற்போது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் நாட்டுப்புற கல்விசார் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். [3] 2019 இல், இந்தியக் குடியரசுத் தலைவரால் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. [4]
ஜாகர் என்பது பொதுவாக தெய்வம் அல்லது கடவுளை மகிழ்விப்பதற்காகப் பாடப்படும் ஒரு புனிதமான குரலிசை பாரம்பரியம் அத்தோடு சில நேரங்களில் குடும்ப தலைவர்கள் மற்றும் மூதாதையர்களின் வடிவத்தில் இயற்கையை வழிபடவும் பாடப்படும் குரலிசையாகும் . பரத்வான், ஜாகரியா என்று அழைக்கப்படும் சிறப்பு நாட்டுப்புற பாடகரின் பிரிவைச் சேர்ந்தவர். இந்தியாவின் உத்தரகாண்டின் சிறந்த நாட்டுப்புற பாடகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் பல்வேறு மொழி, கலாச்சாரம், இசைப்பிரிவு மற்றும் தளங்களில் இருந்து கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தனி இசைத்தட்டுகள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை பதிவு செய்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "My Padma award will give a boost to Pahadi folk music: Pritam Bhartwan | Dehradun News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). March 27, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-31.
- ↑ "My Padma award will give a boost to Pahadi folk music: Pritam Bhartwan | Dehradun News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). March 27, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-31."My Padma award will give a boost to Pahadi folk music: Pritam Bhartwan | Dehradun News - Times of India". The Times of India. March 27, 2019. Retrieved 2019-07-31.
- ↑ "Pritam Bharatwan Jagar Dhol Sagar International Academy". drishtiias. October 18, 2021.
- ↑ "My Padma award will give a boost to Pahadi folk music: Pritam Bhartwan | Dehradun News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). March 27, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-31."My Padma award will give a boost to Pahadi folk music: Pritam Bhartwan | Dehradun News - Times of India". The Times of India. March 27, 2019. Retrieved 2019-07-31.